தமிழகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் அக். 16 ஆம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வுப் பகுதியாக வலுவலடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பச்சப்பட்டி, கிச்சிபாளையம், முகமதுபுரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி கடல்போலக் காட்சியளித்தது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் முகமதுபுரா பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கழிவு நீரோடு கலந்து புகுந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: ஓமலூர் பண்ணப்பட்டி ஏரி உடையும் அபாயம்!. பாதுகாப்பு கருதி சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலை மூடல்!.