தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை கனமழை மற்றும் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழையும், மிக கனமழையும் மாறி, மாறி பெய்யும் என்று வானிலை ஆய்வ மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் இன்று(அக்.12) திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.13) கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 14ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிசச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15ம் தேதி திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Readmore: மாணவர்களே ரெடியா?. அரையாண்டுத் தேர்வு அப்டேட் வந்தாச்சு!. எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?.