சேலம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக இரவு முதல் அவ்வபோது மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று காலை 6 மணி வரை டேனிஷ் பேட்டை 47 மி.மீ., நத்தக்கரை 14 மி.மீ., ஏற்காட்டில் 13.2 மி.மீ., ஏத்தாப்பூரில் 12 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால், இன்று ஆயுத பூஜையையொட்டி, பூ, வாழைப்பழம் விற்பனை ஆகாமல் இருந்ததால் வியாபாரிகள் சற்று கவலையடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால். இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது.