2024-25ம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டியில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற காலாண்டு தேர்விற்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால், பள்ளி வேலைநாட்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்படி புதிய திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, டிசம்பர் மாதத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரை, வார விடுமுறை நாட்கள் செல்ல இதர நாட்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். டிசம்பர் 16-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாட்கள் டிசம்பர் 24-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறைகள் சேர்ந்து 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் மூன்றாம் பருவம் தொடங்குகிறது. 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருத்தல் தேர்வு (Revision Exam 2024) ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் திருத்தல் தேர்வு ஜனவரி 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் ஆகிய அரசு விடுமுறை நாட்கள் போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

மார்ச் 3-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வு தொடங்கும். மார்ச் 30 மற்றும் 31-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரமலான் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 2024-25 கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறும். அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடங்கிவிடும். நிர்வாக பணிகள் சேர்ந்து பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ஒற்றை வீடியோவால் ஒரே இரவில் மாறிய வாழ்க்கை!. இனி எப்போதும் அவருடன்தான் இருப்பேன்!. ரஞ்சிதாவின் அதிரடி பேச்சு!