மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காடையாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தினந்தோறும் 28மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. காடையாம்பட்டி கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலமாக மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி, மேச்சேரி, ஓமலூர், தொப்பூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் வினியோக மின் மோட்டார்களை நிறுத்தினர். மேலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து, பழுதான நிலையில் உள்ள ராட்சதக் குழாய்களை மாற்றி பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Readmore: வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்!. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!