வடகிழக்கு பருவமழை வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்றும் இது லாலினோ ஆண்டு என்பதால், வழக்கத்தைவிட மழை அதிகமாகவே இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே பலத்த சேதம் மற்றும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் சற்று குறைவான மழையே பெய்து வருகிறது.

இந்தநிலையில், அக்டோபர் 2வது வாரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் மழை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள். அதாவது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 13ம் தேதி தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளநிலையில், தமிழகத்தின் கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கடந்த ஆண்டு வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சூழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்து கொண்டு மக்கள் வெளியேற முடியாத நிலையில் இருந்தது. பிறகு மழை படிப்படியாக குறைந்ததும் தண்ணீர் வெளியேறியது. இந்த காலகட்டத்தில் மக்கள் மின்சாரம், தண்ணீர், உணவு இல்லாமல் அவதியடைந்தனர். அந்தவகையில் இந்தாண்டு மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Readmore: எடப்பாடி மாணவியின் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!. நீட் விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுவதாக கண்டனம்!