தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் தீபாவளி போனஸ் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

Read More : அறிவிப்பு வந்தாச்சு!. ரூ.29,000 ஊதியம்!. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!.