குமாரபாளையம் அருகே போதைக்கு அடிமையான இளைஞர், தனக்குத்தானே ஊசி போட்டு கொண்டதால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கௌதம்ராஜ் (21). வண்டி குதிரைகளுக்கு முடிவெட்டும் தொழிலாளியான இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அனுசுயா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கௌதம்ராஜ்க்கு கஞ்சா புகைப்பது, போதை ஊசி போட்டு கொள்வது ஆகிய பழக்கங்கள் இருந்துள்ளது. இதனை அனுசுயா கண்டித்துள்ளார். ஆனாலும் கௌதம்ராஜால் போதை பழக்கத்தில் இருந்து வெளிவரமுடிவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், வழக்கம்போல், நேற்று முன்தினம் கௌதம்ராஜ் வீட்டின் மொட்டைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவர், போதை ஊசிப் போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அலறு அடித்துக்கொண்டு கீழே சென்று நடந்ததை மனைவியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, மயங்கிய நிலையில் கிடந்த கௌதம் ராஜை உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த ஊசி மற்றும் சிரிஞ்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து மனைவி அனுசுயா, நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: உஷார்!. பாலமலை அடிவாரத்தில் ஜோடியாக உலா வரும் சிறுத்தைகள்!. பொதுமக்கள் அச்சம்!