ஆயுத பூஜையை முன்னிட்டு நாமக்கல் பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.
இந்த வாழைத்தார்கள் பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டில் நேற்று விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுசென்றனர். வழக்கத்தைவிட விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. ஏனெனில், வரும், 11ல் ஆயுத பூஜையை பண்டிகை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்து விற்பனையாகியுள்ளது. அதாவது, கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று 800 ரூபாய்க்கு; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாலி, 650 ரூபாய்க்கு; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்க்கும்; மொந்தன் காய், 6 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Readmore: இசைக்கேற்ப நடனம்!. உலக சாதனை படைத்த சேலம் மாற்றுத்திறனாளிகள்!.