சேலம் தலைவாசல் அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றபோது, மணல் சறுக்கி கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீ.ராமநாதபுரம், உதயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கனகா(2). இவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, திடீரென ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் உள்ள கிணற்றிக்குள் விழும் வகையில் சென்றுள்ளது. இதனை பார்த்த கனகா, விழாமல் இருப்பதற்காக உடனடியாக ஆட்டுக்குட்டியை தள்ளிவிட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மண் சறுக்கியதில் கனகா, கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரகனூர் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Readmore: ரெய்டுக்கு வராதீங்க!. ரூ.1 லட்சம் தரேன்!. கையும் களவுமாக சிக்கிய சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர்!.