சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றுகூடி ஒரே இடத்தில் நின்று இசைக்கேற்ப நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சேலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சாா்பில், உலக சாதனை நிகழ்ச்சிக்காக ‘உங்கள் வழியில் பறக்க’ என்ற தலைப்பின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீண் குமாா் அபிநபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இதில், 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது, சினிமா பாடல்களுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒரே இடத்தில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினா்.
இதையடுத்து இந்த முயற்சியை உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து ஜேக் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் குழுவினா் அதற்கான சான்றிதழை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினா். தொடா்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
Readmore:பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை!. ரேஷன் கடையை சூறையாடியதால் மக்கள் பீதி!.