Play Store இல் மில்லியன் கணக்கான பயன்பாடுகள் உள்ளன, அவற்றில் சில நம்பகமானவை மற்றும் சிலவற்றை நம்பவே முடியாது. இந்தநிலையில், தற்போது மக்களை ஏமாற்றும் மோசடி செயலி ஒன்றை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதாவது, கூகுள் ப்ளே ஸ்டோரில் கிரிப்டோகரன்சியை திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப்ஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸை ஆபத்தானதாக்குவது என்னவென்றால், Play Store-லிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு 5 மாதங்களுக்கும் மேலாக இது கண்டறியப்படாமல் இருந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இது மார்ச் 2024 இல் Google Play Store-இல் பதிவேற்றப்பட்டது.
சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ள மோசடி செயலி WalletConnect Airdrop Wallet ஆகும். இலக்கில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் பலர் இதைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த போலி செயலி கடந்த சில மாதங்களில் பலரை ஏமாற்றி முதலீடு என்ற பெயரில் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
5 மாதங்களில் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $70,000 (சுமார் 58.6 லட்சம்) மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடுயுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் இது 10 ஆயிரம் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது. ஹேக்கர்கள் ஃபிஷிங் இணையதளங்கள் மற்றும் முறையான கிரிப்டோகரன்சி இயங்குதளங்களைப் பிரதிபலிக்கும் பயன்பாடுகளைப் பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றதாகவும் இதனால் புதிய பயனர்கள் அவர்களின் வலையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
Readmore: பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை!. ரேஷன் கடையை சூறையாடியதால் மக்கள் பீதி!.