ஒருவரை வெறுக்க வைப்பது ஜாதி, மதம் என்று நடிகர் அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பார்முலா ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும்.

அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். அஜித்திற்கு பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். படப்பிடிப்பு முடிந்தவுடன் பைக்கை எடுத்துக்கொண்டு பைக்கில் டூர் கிளம்பி விடுவாராம்.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டு நடக்க உள்ள European GT championship கார் பந்தய போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது, இந்தநிலையில், நடிகர் அஜித் குமார் வீனஸ் டூர்ஸ் நிறுவனத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் கூறுகையில், “மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை.. மக்களை பார்க்காமலேயேக் கூட அவர்களை நாம் இப்படித்தான் என மதிப்பிட கூடும்.

ஆனால், நீங்கள் பயணிக்கும்போது பலதை அனுபவிக்கலாம். நான் பயணித்தின்போது, பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களைப் புரிந்து கொள்ள முடியும். பயணத்தினால், உங்களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்து கொள்ள தொடங்குவீரகள். அது உங்களை மேம்பட்ட மனிதராக்கும்” இவ்வாறு பேசியுள்ளார்.

Readmore: நாளை தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 8!. வீட்டிற்குள் செல்லும் அந்த 18 போட்டியாளர்கள் இவர்கள்தான்..!!