தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அக்டோபர் 6ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், திங்கட்கிழமை 7-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதாவது, பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதேபோல், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றொரு அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் மகிழ் முற்றம் குழுக்கள் உருவாக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் விதத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவை பெயரில் குழுக்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பதை குறைத்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையேயான உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சேலம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!. பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!.