ராகி (சம்பா) சிறப்பு பருவத்தில், PMFBY பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய வேளாண் துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்தினரும் அறிவுறுத்தி வருகின்றனர் . பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டால் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும், நில உரிமையாளர், பங்குதாரர்கள் மற்றும் குத்தகைதாரர் ஆகியோர் தகுதி பெறுவர். மேலும் நெல், மக்காச்சோளம், பருத்தி வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு இந்த காப்பீடு திட்டம் பொருந்தும்.

அதன்படி, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பருவ பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல், ராகி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, துவரை, நிலக்கடலை, எள், வாழை, மரவள்ளி, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. விவசாயிகள் குறைந்த காப்பீட்டு தொகையை செலுத்தி பெரும் பாதுகாப்பை பெறலாம். காரிப் பருவத்திற்கு 2%, ரபி பருவத்திற்கு 1.5% மற்றும் வணிக பயிர்களுக்கு 5% என காப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு!. இனி அபராதம் தான்..!! ஆட்சியர் பிருந்தா தேவி அதிரடி உத்தரவு!