பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் இருப்பதாக அம்மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோபி மஞ்சூரியன், பானி பூரி, கேபாப் உள்ளிட்ட ஸ்ட்ரீட் புட்களில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ஆபத்தான கெமிக்கல் இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கர்நாடகா பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகளிலும் அந்த கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகள் தான் அதிகளவில் செயற்கை வண்ணங்களுடன் தயாரிக்கப்படுவதால் அதுவே அதிக ஆபத்தானதாக உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, கேக்குகளில் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்கும் பேக்கரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பஞ்சு மிட்டாய்களில் நிறமூட்டிகள் சேர்க்கப்படுவது சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து, தற்போது கேக்குகள் குறித்து பிரச்னை எழுந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 223 கேக் மாதிரிகள் பாதுகாப்பாக இருந்தன. ஆனால் 12 கேக்குகளில் செயற்கை வண்ணங்கள் ஆபத்தான அளவில் இருந்தன. குறிப்பாக Allura Red (ஒரு வகை சிவப்பு), சன்செட் மஞ்சள், ஸ்ட்ராபெரி சிவப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் மரூன் போன்ற செயற்கை நிறங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Readmore: சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு!. இனி அபராதம் தான்..!! ஆட்சியர் பிருந்தா தேவி அதிரடி உத்தரவு!