தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுக்கடைகள் மூட அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடும் நடைபெற்றது. இதிலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடினால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த அமைச்சர் சு.முத்துசாமி சமீபத்தில் கூறும்போது, தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்காக கடைகளை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற அக்டோபர் 8-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மேலும் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்பின், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,329 ஆக குறைய வாய்ப்புள்ளது.

திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சுமார் 300 முதல் 400 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Readmore: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்!. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு!