சங்ககிரியில் சாலையோர பாலத்தில் சூட்கேஸுக்குள் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் சூட்கேஸில் இருந்து இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இளம்பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து பெண்ணின் உடல் சேரம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சங்ககிரி போலீசார், விசாரித்து வந்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்ஐக்கள் ஸ்ரீ ராமன், கண்ணன் ஆகியோர் தலைமையில், 3 தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், போர்ஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில், இளம்பெண்ணின் 2 கைகளிலும் 6 விரல்கள் என 12 விரல்கள் இருந்துள்ளன. மேலும் இந்த பெண்ணுக்கு 18 வயது இருக்கலாம் என்றும் நீண்ட நாட்களாக பலரால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இளம்பெண்ணின் உடலில் சுற்றப்பட்டிருந்த பெட்ஷீட் லாட்ஜில் பயன்படுத்தக்கூடியது என்பதும் உடல் அடைக்கப்பட்டிருந்த சூட்கேஸ், பெங்களூரை சேர்ந்த நிறுவனம் என்பதும் தெரியவந்தது. புதிதாக வாங்கப்பட்ட சூட்கேஸ் குறித்து பெங்களூரில் 5 கடைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: தீபாவளிக்கு நீங்களும் பட்டாசு கடை போடணுமா..? அப்படினா சேலம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பை பாருங்க..!!