பிரபல நிறுவனம் மூலம் போலி உணவுப் பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநிலத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேரை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் துஷ்யந்த் யாதவ், மதுரையை சேர்ந்தவர் முத்துராமன். இருவரும் பிரபல தேயிலை, காபி நிறுவனங்களின் பெயரில் போலிப் பொருட்கள் விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசின் லோகோ, சின்னம், தேசியக் கொடியை தவறாக பயன்படுத்தி போலியாக உணவுப் பொருட்கள் விற்பனை செய்துவந்துள்ளனர். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், உணவுப்பொருட்கள் போலியானது என்பது தெரியவந்தது, இதையடுத்து, இருவரியும் கைது செய்த சூரமங்கலம் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கவிதா கூறுகையில், “இது போன்ற சம்பவங்களைத் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேகப்படும் பொருட்களை உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Readmore: நகைக்கு அதிக வட்டி தருகிறோம்..!! ஆசையை தூண்டி ரூ.100 கோடியை அபேஸ் செய்த 3 பேர் கைது..!! சேலத்தில் அதிர்ச்சி..!!