இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளான (அக்டோபர் 3) இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் 12ம் தேதி வரை மக்கள் விரதம் இருந்து வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதேபோல், அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்தவகையில் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது. கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.
இதையடுத்து, தங்க ரத ஊர்வலத்தில் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Readmore: என்ன வனிதா இதெல்லாம்?. 50 வயதில் 4வது திருமணமா?. டான்ஸ் மாஸ்டருடன் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!.