ஆத்தூர் அருகே எலக்ட்ரிக் சைக்கிள் தயாரித்து பள்ளிக்கு சென்றுவந்ததை அறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொலைப்பேசியில் தொடர்பு அரசுப்பள்ளி மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். பெத்தநாயக்கன் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில், புதிய முயற்சியாக எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்கும் முயற்சியில் மாணவர் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் இவரது முயற்சி வீண்போகாமல் இறுதியாக எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் தான் தயாரித்த அந்த சைக்கிளிலேயே தினமும் பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். அதாவது, இந்த சைக்கிளில் 2800 ஆர்.பி.எம். வேக மோட்டார் பொருத்தப்பட்டு, அதில் 30 கி. மீட்டர் வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் மிதி வண்டியை அபிஷேக் வடிவமைத்து மாணவர் சாதனை படைத்துள்ளார். 45 நிமிடத்தில் பள்ளிக்கு சென்று வந்த அவர் தற்போது,15 நிமிடத்தில் சென்று வருகிறார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Readmore: Google Chrome பயனர்களே எச்சரிக்கை!. திருடப்படும் தனிப்பட்ட தகவல்கள்!. பணம் கேட்டு மிரட்டும் கும்பல்!