சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலைத்தடுமாறிய லாரியால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
விருத்தாசலத்தில் இருந்து கேரளா மாநிலம் திருச்சூர் நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த லாரியை சாமியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது லாரி திடீரென நிலைத்தடுமாறியதால் உடனடியாக சாமியப்பன் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது, பின்னால் வந்த வாகங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதாவது, லாரி திடீரென நின்றதால், கார், வேன் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. கிரிக்கெட் விளையாட சேலத்தில் இருந்து கோவைக்கு சென்ற இளைஞர்கள் உட்பட 10 பேர் விபத்தில் காயமடைந்தனர். விபத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
Readmore: திருமணம் செய்வது மட்டுமல்ல, பதிவு செய்வதும் முக்கியம்!. ஆன்லைனில் பெறுவது எப்படி?