சேலம் மாநகராட்சியுடன் கன்னங்குறிச்சி, கருப்பூர் பேரூராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதே போல நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகல் இணைக்கப்படுகின்றன. புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகளும், 24 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்படுகின்றன. இதே போல புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள மாநகாட்சிகளுடன் ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி மற்றும் ஒரு கிராம ஊராட்சி இணைக்கப்படுகிறது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சியுடன் கருப்பூர், கன்னங்குறிச்சி பேரூராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. இதேபோல், செட்டிசாவடி, கொண்டப்பன்நாயக்கன்பட்டு, எருமாபாளையம், சந்நியாசிக்குண்டு, அமனி கொண்டலாம்பட்டி ஆகிய ஊராட்சிகளும் சேலம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன. மேலும், இடங்கணசாலை நகராட்சியில் இளம்பிள்ளை பேரூராட்சியும் பெருமாகவுண்டம்பட்டி, வேம்படிதாளம் ஆகிய 2 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளன. இதேபோல், மேட்டூர் நகராட்சியில் பி.என்.பட்டி பேரூராட்சியும் இணைக்கப்படவுள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: சங்ககிரி அருகே சூட்கேசில் இளம்பெண் உடல்!. சிதைந்த நிலையில் கண்டெடுப்பு!. போலீசார் தீவிர விசாரணை!