காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அக்டோபர் 2 (புதன்கிழமை) அன்று “காந்தி ஜெயந்தி” அரசு விடுமுறையை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: திடீர் உடல்நலக்குறைவு!. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!