இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித்சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமின்றி பெயா் பதிவு செய்து கொள்ளலாம்.

12 மாதங்களுக்கு பிறகு 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமத கட்டணம் ரூ. 200 செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். பெயா் பதிவு தொடா்பாக பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள பகுதியின் பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி பெயா் பதிவு செய்து கொள்ளலாம்.

சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயா் பதிவு செய்யாமல் இருப்பின் உரிய ஆவணங்களுடன் (பிறப்பு சான்றிதழ் நகலுடன்,ஆதாா் அட்டை நகல்,வாக்காளா் அட்டை நகல், ரேசன் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று) ரூ. 200 காலதாமதக் கட்டணம் செலுத்தி சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை நடப்பாண்டு டிசம்பா் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு!. போக்குவரத்து நெரிசல்!. மக்கள் கடும் அவதி!