வெள்ளக்கோவில்-சங்ககிரி வரை ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் தஞ்சாவூருக்குச் சென்றபோது,​​தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ₹1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். சோழபுரம்-தஞ்சாவூர் மற்றும் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் ஆகிய நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இவை என்னென்ன திட்டங்கள் என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

சென்னை – சேலம் கிரீன்ஃபீல்ட் வழித்தடம், குமாரபாளையம் – செங்கப்பள்ளி 8 வழிச்சாலை, கோவை – கரூர் 6 வழிச்சாலை, சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் தருமபுரி- நாமக்கல் 8 வழிச்சாலை, கிளாம்பாக்கம் மகேந்திரா சிட்டி ஆறுவழி மேம்பால சாலை, ஸ்ரீபெரும்புதூர்-மதுரவாயல் ஆறு வழி மேம்பால சாலை, சென்னை திருச்சி மதுரை பசுமைவழிச் சாலை, கல்லகம் பீன்றகுட்டு நான்குவழி புறவழிச் சாலை, கடலூர் தறைமுக இணைப்பு நான்குவழிச் சாலை, கரூர்-கோவை 6 வழிச்சாலை ரோடு இணைப்பு ராமநாதபுரம் தூத்துக்குடி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட 25 சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.இது போக 4,730 கோடி செலவில் கட்டப்படும் 164 கிமீ விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். அடுத்த 3 மாதங்களில் இதன் பணிகள் நிறைவு அடையும் என்று உறுதி அளித்தார். இங்கே பணிகள் கடந்த 5 வருடமாக சரியாக நடக்கவில்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.பி தயாநிதி மாறன் தமிழக நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில், தற்போது நடைபெற்று வரும் நெடுஞ்சாலை திட்டப் பணிகள், புதிய திட்டங்கள், குறிப்பாக எந்தெந்த வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ளன, இந்த பணிகளால் உள்ளூர் பொருளாதாரத்திற்கு என்ன நன்மைகள் ஏற்படும், மேற்கண்ட பணிகளை பகுதி மக்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன போன்ற கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். அதில், தமிழகத்தில் தற்போது 71 நெடுஞ்சாலை திட்டங்கள் 1,604.48 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான செலவு 46,617.50 கோடி ரூபாய். இந்த திட்டத்தில் பைபாஸ் சாலைகள், பாலங்கள், சுரங்க வழிச் சாலைகள், சாலை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலும், வாலாஜாபேட்டை முதல் ஆந்திரப் பிரதேசம் / தமிழ்நாடு எல்லை வரையிலும், மேட்டுப்பாளையம் முதல் கர்நாடகா எல்லை வரையிலான செக்‌ஷனில் வெள்ளக்கோவில் முதல் ஈரோடு செக்‌ஷன் வரையிலும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழியாக சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கம் விரைவில் நடக்க உள்ளது. 2,000 கோடி செலவில் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிக முக்கியமானது ஆகும். இந்த நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைப்பு, வாகன இயக்கச் செலவு, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற பயன்கள் கிடைக்கும்.

Readmore: சேலம் ஆர்.ராஜேந்திரன் உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!. ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.