இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. பெரும் நகரம் முதல் சிறு கிராமம் வரை அனைத்து தரப்பினராலும் யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி யுபிஐ மூலமாக பணம் அனுப்பும் போது சிலர் கவனக்குறைவாக தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்பி விடுகின்றனர்.
அந்தவகையில், ராஜஸ்தானைச் சேர்ந்த அமித் மேங்கன் என்பவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.5 லட்சம் பணத்தினை தவறுதலாக சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள 9-ம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தனது அக்கவுண்டிற்கு பணம் வந்தது கூட இந்த மாணவனுக்குத் தெரியாது. இந்நிலையில் வங்கியிலிருந்து மேலாளர் மாணவனின் தந்தை செல்போனுக்கு அழைத்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டது குறித்துத் தெரிவிக்க அப்போது வங்கிக் கணக்கினை சோதித்துப் பார்க்கையில் மாணவனின் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே முகம்மது அஷ்ரத் என்ற அந்த மாணவனின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு சம்பந்தப் பட்ட வங்கிக்குச் சென்று எந்தக் கணக்கிலிருந்து பணம் வரவு வைக்கப்பட்டதோ ராஜஸ்தானைச் சேர்ந்த அமித் மேங்கனின் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் 2.5 லட்சம் பணத்தினை அனுப்பியிருக்கிறார். மாணவன் மற்றும் அவரின் தந்தையின் நேர்மையினை வங்கி அதிகாரி உட்பட பலர் பாராட்டினர்.
Readmore: புதிய ரேஷன் கார்டு அப்டேட்!. கூடுதல் சர்க்கரை வழங்க முடிவு!. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!.