மேட்டூர் அருகே 12ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கியதாக 18வயது ஐடிஐ மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவந்த நிலையில், வீட்டில் அவ்வபோது வாந்தி எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, மாணவி படித்து வந்த அதே பள்ளியை சேர்ந்த கடந்தாண்டு வரை படித்த மாணவரை காதலித்து வந்ததும், இருவரும் அவ்வப்போது தனிமையில் ஒன்றாக இருந்ததும் தெரியவந்தது. அதனால், மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.
தற்போது 18 வயது கொண்ட அந்த மாணவர், ஐடிஐ படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய ஐடிஐ மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Readmore: வரலாறு காணாத உச்சம்!. 57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!. நகைப்பிரியர்கள் ஷாக்..!!