வரலாற்றிலேயே இல்லாத அளவு ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூபாய் 320 அதிகரித்துள்ளது. 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ7,100க்கு விற்பனையாகிறது..
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 27) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40 உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 320 உயர்ந்து, ரூபாய் 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.102-க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.102,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் இந்த தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Readmore: தமிழகத்தில் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்! இந்த மாவட்டம்தான் முதலிடம்!. அதிர்ச்சி தகவல்!