போராளி திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், லட்டுவில் என்ன சனாதனம் வருகிறது. லட்டு பிரச்னையில் ஒப்பந்தம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, கலந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இனிமேல் இப்படி நடைபெறாதபடி வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்தைக் கொடுங்கள். இவ்வளவு தானே. லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டியதது தான் பெரிய உருட்டு இந்திய முழுமைக்கும் பெரிய உருட்டு.

நீங்கள் பெருமாளை மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? ஒரு லட்டுக்காக பெருமாள் மாசடைந்து விடுவாரா? புனிதம் கெட்டுவிடுமா? உங்களது அரசியலுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? சாதி, மதம், சாமியை வைத்து அரசியல் செய்து சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான்” எனத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் திமுக போட்ட வழக்கில்தான் செந்தில்பாலாஜி உள்ளே சென்றுவிட்டு வந்திருக்கிறார். உங்கள் கட்சியில் இருந்தால் அது வீரதீர செயல், மற்ற கட்சிகளில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டா? “திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என முழக்கத்தை முன்வைத்தது இன்று அல்ல. ஆரம்பத்திலேயே வைத்திருக்கிறார். இதனை பொதுவான கோரிக்கையாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Readmore: பல கோடி மதிப்பிலான சொத்துக்களை போலியாக மாற்றிய சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி..!! தட்டித் தூக்கியது சிபிசிஐடி..!!