தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார். தவெக மாநாடு வரும் செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போலீஸார் தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், மாநாட்டு தேதி தள்ளிபோகியுள்ளது. அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு, வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “தளபதினா… நம் தலைவர் தளபதி மட்டும் தான். காவல் துறை எத்தனை கண்டிஷன் போட்டாலும் சரி, தளபதி சொன்னா அதை செய்ய லட்சம் பேர் இருக்காங்க.
அக்.27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு தவெக மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு மகளிர் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான், 2026ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்” என்று பேசியுள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், புஸ்ஸி ஆனந்தின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: 50 வயதில் விவாகரத்து!. கணவரை டிவர்ஸ் செய்யும் இந்தியன் பட நடிகை!.