விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு வருபவர்கள் யாரும் மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றி கழக மாநாடு நடத்தப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கட்சி தலைமை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக 8 நிபந்தனைகளை கட்சி மேலிடம் ரசிகர்கள் கம் தொண்டர்களுக்கு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
பெண் போலீசாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கிணறு, ஆபத்தான பகுதிகள் இருப்பின் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் (பைக் ஸ்டண்ட்) ஈடுபடவே கூடாது. மருத்துவக்குழு, தீயணைப்புத்துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரவேண்டும். பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஆட்களை ஏற்றி வரவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பற்றித் தொண்டர்களுக்குக் கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Readmore: கணவரிடம் கருத்து வேறுபாடு!. விசாரணைக்கு சென்ற பெண் திடீரென செய்த சம்பவத்தால் பரபரப்பு..!!