ஆத்தூர் அருகே கணவருடனான கருத்து வேறுபாடு பிரச்சனையில் விசாரணைக்காக காவல் நிலையம் வந்த பெண் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னம்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கும் தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார் சிவரஞ்சனி.
இந்நிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் பிரபாகரன் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக சிவரஞ்சனி, தனது தந்தையுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் கணவர் பிரபாகரன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனை தட்டிகேட்காமல் தனது தந்தையை போலீசார் தாக்கியதாகவும் கூறி அப்பெண் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து சிவரஞ்சனியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Readmore: தல ரசிகர்களே!. செம ட்ரீட் இருக்கு!. மீண்டும் கார் ரேசில் பங்கேற்கும் AK!.