புதுக்கோட்டையில் சேலத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நமுணசமுத்திரம் பகுதியில் இன்று காலையில் இருந்து சாலையோரம் கார் ஒன்று வெகு நேரம் நின்றுக்கொண்டிருந்துள்ளது. காரின் கதவுகள் திறக்க முடியாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நமணசமுத்திரம் போலீசார், கார் பதிவு எண் குறித்து விசாரித்ததில் சேலத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது. பின்னர் கார் கதவை உடைத்து திறந்த பார்த்தப்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (50), அவரது மனைவி நித்யா (48), தாயார் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடன் தொல்லையால் மன விரத்தியில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Readmore: சம்பவம் இருக்கு!. வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!. 6 நாட்கள் மழை நீடிக்கும்!