நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதால், கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, அவ்வழியாக பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி பகுதியில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் அருகில் அரசிராமணி பேரூராட்சிக்கு சொந்தமான நீர்வழிப் பாதை செல்கிறது. ஆனால், இந்த பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், கால்வாயில் தண்ணீர் செல்லும் போது அந்த பாதை வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால், அதிகாரிகள் நேரில் சென்று இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : சம்பவம் இருக்கு!. வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!. 6 நாட்கள் மழை நீடிக்கும்!