சேலம் ஆத்தூரில் ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேற்று ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், கடந்த 3 ஆண்டுகளாக ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும், இப்பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு தரமானதா என்பதை உறுதி செய்ய தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தொடங்கப்பட்ட 4,550 வளர்ச்சித் திட்டங்களில் 3331 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1219 திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Read More : சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!