வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், அடுத்த 6 நாட்கள் வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Readmore: தல ரசிகர்களே!. செம ட்ரீட் இருக்கு!. மீண்டும் கார் ரேசில் பங்கேற்கும் AK!.