அறிவியலின் புதிய கண்டுபிடிப்பான ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த வகையில், ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்ஃப் செய்து வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் சித்தரித்து வெளியிட்டனர். இதேபோல் நடிகை கஜோல் ஆடை மாற்றும் போலி வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது, ‘தி கோட்’ படத்தில் விஜயுடன் த்ரிஷா நடனமாடினார். அதே கெட்டப்பில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரிஷாவும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடிப்பது போலவும், லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்றும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். அனுமதி இல்லாமல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இப்படி செய்வது குற்றம் எனவும், இதுபோன்று சித்தரித்து கேவலப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இனிவரும் நாட்களில் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

Readmore:கவலை வேண்டாம்!. ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு சொன்ன குட்நியூஸ்!. என்ன தெரியுமா?