தமிழகம் முழுவதும் விளைச்சல் பாதிப்பு காரணமாக தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரையிலும் சீராக இருந்த தேங்காய் விலை, வரத்து குறைவால், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் விளைச்சல் பாதிப்பு காரணமாக, தேங்காய் விலை உயர்ந்துள்ளது. ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், மேச்சேரி, மல்லூர், பனமரத்துப்பட்டி, கன்னங்குறிச்சி, வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, சங்ககிரி, அரசிராமணி, ஜலகண்டாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. நான்கு ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் தென்னை விவசாயம் அழிவுக்கு சென்றது. இதேபோல், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் தேங்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை தாண்டி ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கெல்லாம் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, மார்க்கெட்டில் தேங்காய் வரத்து குறைந்து போனதால் அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் சிறிய அளவிலான ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு தேங்காய் ரூ.15 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், அடுத்த மாதம் (அக்டோபர்) விஜயதசமி, சரஸ்வதி பூஜையும், அதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வர இருப்பதால் தேங்காய் விலை மேலும் அதிகரிக்கவாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் விலையேற்றம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகள் வாழ்வில் தற்பொழுது தேங்காயின் விலை உயர தொடங்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: ஒரு கிலோ 10 ரூபாய் தான்..!! மாடுகளுக்கு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்..!! விவசாயிகள் வேதனை..!!