மேட்டூர் அருகே விளைச்சல் அதிகரித்தும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அறுவடை செய்த பீர்க்கங்காய்களை மாடுகள் தீவனமாக கொட்டவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 14 ஊராட்சிகளில், 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடையாகும் பீர்க்கங்காய், சந்தைகளுக்கு கொண்டு சென்று விறபனை செய்து வருகின்றனர். மேலும், காய்கள் நல்ல தரமாக உள்ளதால், வியாபாரிகளும் நேரடியாக வந்து பீர்க்கங்காய்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று மேட்டூர் உழவர் சந்தையில் கிலோ பீர்க்கங்காய், 25 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம், வியாபாரிகள் அதிகபட்சம், 10 ரூபாய்க்கு காய்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் விரக்தி அடைந்தனர். சில விவசாயிகள், சாகுபடி செய்த பீர்க்கங்காய்களை விற்காமல் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனமான கொட்டவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Readmore: உங்கள் வாட்ஸ் அப் Chat-ஐ வேறு யாராவது படிக்கிறார்களா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..?