மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை 3வது கணவர் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், காவேரி புரத்தைச் சேர்ந்தவர் கவிதா. 31 வயதான இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார். 2 குழந்தைகள் உள்ள நிலையில், கவிதாவிற்கும் பாலவாடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் இடையே கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகவும் இதனால் அடிக்கடி கணவன் – மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால் 4 மாதங்களுக்கு முன் கோவையில் உள்ள தாய் வீட்டிற்கு கவிதா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமாதானம் பேசி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தநிலையில், மற்ற ஆண்களுடனான தொடர்பை துண்டிக்காமல் தொடர்ந்துள்ளார் கவிதா. இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம், கவிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள கணவர் அருணாச்சலத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: அடேங்கப்பா!. சேலத்தில் புதிய உதயம்!. மினி டைடல் பார்க்!. முதலமைச்சர் திறந்து வைத்தார்!.