ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

இதற்காக 2017ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக அளவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. அதேபோல் டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்றும் அப்போது மத்திய அரசு அறிவித்தது.

அதன்பிறகு ரொக்க பரிவர்த்தனைகளைவிட, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மின்னல் வேகத்தில் பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இப்போது மக்கள் கையில் ஒரு ரூபாய் கூட ரொக்கம் இல்லாமல், டிஜிட்டல் மூலமாகவே அனைத்து தேவைகளுக்கும் பணத்தை செலவு செய்ய முடியும் என்கிற நிலை வந்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய நட்சத்திர ஓட்டல் வரை எல்லா இடங்களும் டிஜிட்டல் மயாகிவிட்டன. இரு தனிநபர்களுமே பணத்தை கையில் வாங்குவதற்கு பதில் டிஜிட்டலில் வாங்க தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Readmore: சேலத்தில் பெரும் விபத்து!. கார், பேருந்து, ஆட்டோ அடுத்தடுத்து மோதல்!.