சேலம் மாவட்டம் ஏற்காடு, குப்பனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 1 மணியளவில் வெடி வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நில அதிர்வா என்று பீதியடைந்தனர். மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது அருகிலுள்ள வீடுகளிலும் இதே போன்று உணரப்பட்டதாக கூறினர்.
இதுதொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இருக்கும் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வுக்கான தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனாலும், அடிக்கடி சேலம் மாவட்டத்தில நில அதிர்வு உணரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 20 வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், தற்போது அதேபோல் இந்த சத்தமும் இருந்ததாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
Read More : முழுமுதற் கடவுளே விநாயகா!. சதுர்த்தியன்று இப்படி மட்டும் வழிபடாதீர்கள்!. என்ன நடக்கும் தெரியுமா?