சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்த கோமாளிவட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பட்டாசுகளை தயாரித்து, அதை சேமித்து வைக்க கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கில் வழக்கமாக 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து மூட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மூட்டை வெடித்ததும் அருகில் இருந்த மற்ற மூட்டைகள் மற்றும் கிடங்குகளுக்கு தீ பரவி பயங்கர வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஜெயராமன், முத்துக்குமார், சுரேஷ், கார்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஜெயராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பாரா ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்..!! சாதனை படைத்த சேலம் வீரர் மாரியப்பன் தங்கவேலு..!! தடைகளை தகர்த்தி தரமான சம்பவம்..!!