மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில்,
* மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும்.
* மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
* மருத்துவமனையில் இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையைச் சுற்றி மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.
* மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதாகை வைக்க வேண்டும்.
* மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை உடனே அமல்படுத்த வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மக்களே அலர்ட்!. கடைசி தேதி நெருங்கிவிட்டது!. ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க!. இல்லன்னா சிக்கல்!