கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு யூடியூபர் இர்ஃபான் உதவி செய்துள்ளார். பிரியாணி போட்டியில் கலந்து கொண்டவருக்கு உதவிய சமூக வலைத்தள வாசிகளை பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் சார்பில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும், ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும் என அதிரடியாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இந்த போட்டியில் குழந்தையின் மருத்துவ செலவிற்காக போட்டியில் ஓட்டுநர் ஒருவரும் பங்கேற்றார்.

முன்னதாக, கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கணேச மூர்த்தி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவ செலவிற்காக பிரியாணிப் போட்டியில் கலந்துகொண்டார் . இந்த போட்டியில் சதீஸ் (3 பிளேட்) – 1 லட்சம் பரிசு பெற்றார். இதனைத் தொடர்ந்து கணேச மூர்த்தி (2 மற்றும் அரை பிளேட்) – 50 ஆயிரம் பரிசு பெற்றார்.

இந்நிலையில் தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக கணேசமூர்த்தி என்பவர் பிரியாணி போட்டியில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வந்த நிலையில், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட அவரின் குழந்தையின் மருத்துவ செலவுக்காக கணேச மூர்த்திக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை யூடியூபர் இர்பான் வழங்கி உதவி செய்துள்ளார்.

Read More : மக்களே அலர்ட்!. கடைசி தேதி நெருங்கிவிட்டது!. ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க!. இல்லன்னா சிக்கல்!