ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அவ்வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு வழிகளை பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் OTP, லாகின், தகவல்கள் சுய விபரங்கள் போன்றவற்றை கேட்பது என பல வழிகளில் மோசடி நடைபெருவதாகாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை கவனமாக பகிர வேண்டுமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் போலி லெட்டர் ஹெட்ஸ் மின்னஞ்சலை பயன்படுத்தி தகவல்களை திரட்டி மோசடியில் ஈடுபடுவதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஊழியர்களைப் போல நடித்து லாட்டரிகளில் பரிசு, நிதி பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் பொதுமக்களுக்கான அரசின் திட்டங்கள் ஆகியவைகளில் மோசடி கும்பலின் கைவரிசை இருப்பது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளுக்காக பிராசசிங் கட்டணம் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்பதோடு மட்டுமல்லாமல் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல், ஈமெயில், மூலம் மிரட்டுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கட்டணம் வழங்கவில்லை என்றால் தங்களுடைய  வங்கி கணக்கு முடக்கப்படும் என அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். எனவே, வங்கி சம்பதமான சில தனிப்பட்ட விவரங்களை கேட்டால் பகிர வேண்டாம் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவித்துள்ளது.

Read More : செப்டம்பர் 5ஆம் தேதி வரை துவரம் பருப்பு, பாமாயிலை பெற்றுக்கொள்ளலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!