தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே அதிக விலை தான். அதாவது, அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தும் கூட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படவில்லையாம்.
புல் பாட்டில் வாங்கினால் 40 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும், ஆஃப் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் குமுறுகின்றனர். எனவே, இந்த துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணியை தொடங்கி உள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவோருக்கு விரைவில் பில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாகப்போகிறது. முதற்கட்டமாக சென்னை, கோவையில் இந்த திட்டம் அமலுக்கு வரப்போகிறது. இந்த திட்டம் தீபாவளி முடிந்த பிறகு நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : கரும்புத் தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!