நடிகை ரேகா நாயரின் கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர், உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ரேகா நாயர். இவர், பார்த்திபனின் இரவின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் அதிகம் நடித்திருக்கிறார். இந்நிலையில் தான், சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை பகுதியில் நேற்றிரவு (ஆகஸ்ட் 27) 8 மணியளவில் ரேகா நாயரின் காரை ஓட்டுநர் பாண்டி (25) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது வி.எம்.பாலகிருஷ்ணா தெருவில் மதுபோதையில் கீழே படுத்து தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி மஞ்சன் (வயது 55) என்பவர் மீது கார் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான (Thar) காரை பறிமுதல் செய்து சென்னை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதற்கிடையே, கார் விபத்தில் உயிரிழந்த மஞ்சன் உடல், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயரை நீக்குங்கள்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!