சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீலாங்கரையில் உள்ள தனியார் இடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றவர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. அதை கவனித்து தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயர்களை நீக்க வேண்டும். அப்படி பெயர்கள் நீக்க கொடுத்தும் நீக்கப்படவில்லை என்றால், பட்டியலை என்னிடம் கொடுங்கள்.

நான், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்து பெயர்களை நீக்குகிறேன். மேலும் தேர்தல் முடிவுகளில் சென்னையில் பதிவான வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. காரணம் இறந்தவர்களின் பெயர்கள், ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருப்பதால், தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை என்ற பிம்பம் உருவாகிறது” என்றார்.

Read More : விஜய் மீது பாய்கிறது நடவடிக்கை..? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்..!!